Title(Eng) | Mr. Vedantham |
---|---|
Author | |
Pages | 672 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
மிஸ்டர் வேதாந்தம்
கிழக்கு₹ 375.00
Out of stock
தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை. செல்வச் செழிப்பில் வளர்ந்த வேதாந்தம், திடீரென்று வரும் சரிவு-களால்உருவாகும் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் காதலுக்கும் இடையேசந்திக்கும் சவால்கள்தான் எத்தனை! வேண்டாத மனிதர்கள் உருவாக்கும் பிரச்னைகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்து,காதலி செல்லத்தைக் கைப்-பிடிக்கிறான் வேதாந்தம். இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் ‘மிஸ்டர் வேதாந்தம்’தொலைக்காட்சித் தொடராகவும் வந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது.