Title(Eng) | Vilambara Ulagam |
---|---|
Author | |
Pages | 151 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
விளம்பர உலகம்
கிழக்கு₹ 70.00
Out of stock
ஒரு சிறிய பயிற்சி. உங்களுக்குத் தெரிந்த மூன்று குளியல் சோப்புகளின் பெயர்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். மூன்று டிவி பிராண்டுகள்? சாக்லேட்? சட்டை? கம்ப்யூட்டர்? யோசித்துப் பாருங்கள். சந்தையில் வகைவகையான சரக்குகள் கொட்டிக்கிடக்கின்றன. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரை. ஆனால் சில குறிப்பிட்ட பிராண்டுகள் மட்டுமே நம் மனத்தில் நிற்கின்றன. அவற்றை மட்டுமே நாம் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறோம்; பரிந்துரைக்கிறோம்.அல்லது, இப்படியும் சொல்லலாம். சரியான முறையில் பிரபலப்படுத்தப்படும் பொருள்கள் மட்டுமே வெற்றியடைகின்றன. விளம்பர உலகின் சூட்சுமம் இதுதான். விற்பனை ரீதியில் இன்று கொடிகட்டிப் பறக்கும் பிராண்டுகள் அனைத்துமே தங்களை முனைப்புடன் விளம்பரப்படுத்திக்கொள்பவை. நான்தான் நம்பர் 1, எனக்கு இனி விளம்பரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் யாரும் இல்லை இங்கே. பெருகி வரும் போட்டியாளர்களைச் சமாளித்து, தொடர்ந்து உச்சத்தில் நிலைத்து நிற்க விளம்பரம் அவசியம்.விளம்பர உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே வர்த்தக உலகில் நம்பர் 1 ஆக மலர முடியும். விளம்பர உலகின் அத்தனைக் கதவுகளையும் திறந்து வைக்கும் இந்தப் புத்தகம், எப்படி விளம்பரம் செய்தால் தங்க மழை கொட்டும் என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொடுக்கிறது.