பெண்களின் அந்தரங்கம்


Author:

Pages: 150

Year: 2008

Price:
Sale priceRs. 125.00

Description

ஆணில் பாதியாக விளங்கும் பெண்ணைப் பற்றி எல்லாமும் சொல்லிக்கொடுக்கும் சிநேகிதி இந்தப் புத்தகம். ஒவ்வொரு ஆணும் படித்தே தீர வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி.அய்யய்யோ இந்த பொம்பளைங்களே பேஜாருப்பா. எதுக்கெடுத்தாலும் அழுவாங்க. எந்த நேரத்துல எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னே புரிஞ்சுக்க முடியல பாஸ்! பொண்ணுங்க காதலிக்கறப்பதான் பட்டாம்பூச்சி மாதிரி இருப்பாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் ராட்சஸிங்க. எல்லாம் ஆண்களின் விதவிதமான கருத்துக்கள். தாயாக, சகோதரியாக, மனைவியாக, உறவாக, தோழியாக வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் பங்குபெறும் சகமனுஷியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அதை ஆண்களின் தோல்வியாக மட்டுமே சொல்லவேண்டும்.பெண்களின் இயல்பைப் புரிந்துகொள்ள ஒரு ஆண் தவறும்போதுதான் எல்லாமே பிரச்னைக்குரியதாகிறது. தவறாகப் புரிந்துகொள்வதைப் போலவே, குறைவாகப் புரிந்துகொள்வதும் சங்கடத்தைத்தான் விளைவிக்கும். ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும்.ஓர் ஆணின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அவன் எதிர்கொள்ளும் எல்லாப் பெண்களின் இயல்புகளையும் உள்ளது உள்ளவாறு படம் பிடித்துக் காட்டுகிறது இப்புத்தகம். தாய்ப்பாசம் முதல் தாம்பத்யம் வரை அனைத்திலும் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வும் கொடுக்கிறது.ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது உண்மையோ இல்லையோ, இந்தப் புத்தகம் இருந்தால் எந்தப் பெண்ணின் மனமும் ஆண்களுக்குப் புரியும்.

You may also like

Recently viewed