என். சொக்கன்

எனக்கு வேலை கிடைக்குமா?

கிழக்கு

 75.00

Out of stock

SKU: 9788183689939_ Category:
Title(Eng)

Enakku Velai Kidaikkuma?

Author

Pages

167

Year Published

2008

Format

Paperback

Imprint

கிடைக்கும் வேலை அல்ல. பிடித்தமான வேலை. கிடைக்கும் சம்பளம் அல்ல. லட்சிய சம்பளம். ஆயிரத்தில் ஒருவராக அல்ல. தனித்த அடையாளத்துடன் ஒரு பதவி. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒருவருக்கு?இது சாத்தியம்தானா? பணியிடங்கள் அளிக்கும் விளம்பரங்களைப் பார்த்தால் குழப்பமும் பீதியும் களேபரமும் மட்டுமே மிஞ்சுகின்றன. இந்த வேலைக்கு நான் பொருத்தமானவனா என்னும் கேள்விக்கு எப்படி விடை காண்பது? அதைவிட முக்கியம், இந்த வேலை எனக்குப் பொருத்தமானதாக இருக்குமா?துறைக்கு ஏற்றத் தகுதியை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், உங்கள் தகுதிக்கு ஏற்ற துறையைத் தேர்வு செய்வதும்.உங்களுக்கான எம்ப்ளாய்மெண்ட் வழிகாட்டி இந்தப் புத்தகம். இண்டர்வியூவுக்குத் தயாராவது எப்படி என்று தொடங்கி ஒரு வேலையில் அமர நீங்கள் என்னென்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும், எப்படி என்பது வரை அனைத்தையும் படிப்படியாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.இந்த வேலை எனக்குக் கிடைக்குமா என்று இனி நீங்கள் ஏங்க வேண்டியதில்லை. இவர் நமக்குக் கிடைப்பாரா என்று நிறுவனங்கள் உங்களுக்காக ஏங்கப் போகின்றன. காத்திருங்கள்.