ஆனந்த் ராகவ்

ராமகியன்: தாய்லாந்து ராமாயணம்

கிழக்கு

 175.00

Out of stock

SKU: 9788184930467_ Category:
Title(Eng)

Ramakiyan: Thailand Ramayanam

Author

Pages

160

Year Published

2009

Format

Paperback

Imprint

ராமாயணம் இந்தியாவின் இதிகாசம்தான். ஆனால் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.உன்னதமான காப்பியங்கள் காலம் கடந்து நிற்கும் என்பது உண்மையே. ஆனால் கடல் கடந்தும் நிற்கும் என்பது ராமாயணத்தைப் பொருத்தமட்டில் உண்மையாகியுள்ளது.வாணிபம் செய்யச் சென்ற இந்தியர்கள், கூடவே ராமாயணக் கதையையும் தாய்லாந்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கே இன்று ராமாயணம் ஒரு கலாசார நிகழ்வாக வேரூன்றிவிட்டது. அந்த நாட்டின் ராஜாவுக்கே “ராமா” என்றுதான் பெயர். அங்கே ராமாயணம், கோன் முகமூடிகளை அணிந்து நடித்துக் காண்பிக்கப்படும் ஒரு சிறப்பான கலை வடிவமாகவும் உள்ளது.இந்தியாவிலேயே எண்ணற்ற ராமாயணங்கள். ஒவ்வொன்றும் மூல வடிவமான வால்மீகி ராமாயணத்திலிருந்து சற்றே மாறுபட்டவைதான். தாய்லாந்து ராமாயணம் பெரும்பாலும் வால்மீகியைப் பின்பற்றினாலும், பல இடங்களில் வால்மீகியிடமிருந்து விலகி, வேறு சில இந்திய ராமாயணங்களைப் பின்பற்றுகிறது. அத்துடன் தனக்கே உரித்தான சில மாறுதல்களையும் கொண்டுள்ளது.தாய்லாந்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த ஆனந்த்ராகவ், அந்நாட்டின் ராமாயணத்தைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்துள்ளார். அந்த ஆராய்ச்சியை, படிப்பவர் எளிதில் புரிந்துகொள்ளுமாறு இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளார். கூடவே, பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், பர்மா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ராமாயணங்களைப் பற்றியும் தனித்தனியாக விவரிக்கிறார்.இவ்வளவு ஆழமாக தென் கிழக்கு ஆசிய ராமாயணங்களை அலசி எந்தப் புத்தகமும் தமிழில் இதுவரை வெளியானதில்லை. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:வடக்கு வாசல் – 22.10.09சாய் – 03.07.2009