Title(Eng) | O Pakkangal 2007! |
---|---|
Author | |
Pages | 288 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஓ…பக்கங்கள் 2007!
கிழக்கு₹ 125.00
Out of stock
விவாதம் என்பது வீண் சர்ச்சையல்ல. வெற்றுப் பரபரப்புக்காக, “சும்மா எதையாவது கொளுத்திப்போடலாம்” என்பதற்காக, ஞாநி போகிறபோக்கில் எதையோ எழுதிச் செல்வதில்லை. நமது அரசியல்வாதிகளும் சரி, சமூகத் தலைவர்களும் சரி, மக்களை மதிப்பதில்லை. தாங்கள் செய்வதைச் செய்துவிட்டு, மக்களை சரிகட்டிக்கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே இருக்கிறார்கள்.ஒரு துணிச்சல்மிக்க பத்திரிகையாளர்தான் பொதுமக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார். மக்கள் கேட்கவேண்டிய கேள்விகளை எடுத்து முன்வைக்கிறார். வெகுஜனப் பத்திரிகைகள் சினிமாவை மட்டுமே விற்பனைப் பொருளாக முன்வைக்கும்போது, அதே வெகுஜன இதழ்கள் வாயிலாக, வாசகரை அறிவார்ந்தவர்களாக மதித்து அவர்களோடு உரையாடுகிறார் ஞாநி.ஞாநிக்கும் அவரது வாசகர்களுக்கும் இடையே நடக்கும் இந்தத் தெளிவான உரையாடலே, அரசியல் கட்சிகளுக்கும் பிற ஆதிக்க சக்திகளுக்கும் பீதியைக் கிளப்புகிறது. அவரது குரலை நிறுத்தப் பார்க்கிறார்கள். ஆனால் இன்றைய இந்தியாவில் காலம் மாறிவிட்டது.>br>ஆனந்த விகடனில் 2007-ல் ஞாநி எழுதிவந்த பத்திகளின் தொகுப்பே இந்த நூல். ஆனந்த விகடன் இதழிலிருந்து குமுதம் இதழுக்கு மாறி ஞாநி எழுத ஆரம்பிக்கக் காரணமான, ஆனந்த விகடனில் வெளியாகாத, கடைசிக் கட்டுரையும் இந்த நூலில் இடம்பெறுகிறது.