Title(Eng) | Nerukkadikku Goodbye |
---|---|
Author | |
Pages | 160 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
நெருக்கடிக்கு குட்பை
கிழக்கு₹ 75.00
Out of stock
எதிர்பாராததை எதிர் பார்! – இதுதான் நெருக்கடி நிர்வாகத்தின் முக்கிய ஸ்லோகன்!நெருக்கடிகள்தான் நம்மை மேன்மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன. நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக்கொண்டுவருகின்றன. பல்வேறு தருணங்களில் உயர்வுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருபவையாகவும் அமைகின்றன. இக்கட்டான சந்தர்ப்பங்களில் நெருக்கடி நிலைமையை நெருக்கி அடிக்கிறோமா, நிலை குலைந்து போகிறோமா என்பதில்தான் ஒவ்வொரு மனிதரின் மேலாண்மையும் சாமர்த்தியமும் வெளிப்படுகிறது. நெருக்கடி என்பது யாருக்கும் நிகழக்கூடும். அதைச் சமாளிப்பதுமட்டும் போதாது, அதிலிருந்து முழுமையாக வெளியே வரவேண்டும். நெருக்கடிகள் என்பவை வாழ்க்கையைச் சங்கடப்படுத்துபவையா, சாதிக்கத் தூண்டுபவையா? ஒரு நெருக்கடியைச் சமாளிப்பது, அதிலிருந்து மீள்வது, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு நெருக்கடியின்போது நாம் செய்யக்கூடிய எதிர்வினை என்ன? வரக்கூடிய நெருக்கடியை முன்கூட்டியே எதிர்பார்த்து, மாற்று நடவடிக்கைகளோடு காத்திருப்பது சாத்தியமா? நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஆதார விதிகள் முதல் அதை ஆள்வதற்கான தலைமைக் குணம் வரை அங்குலம் அங்குலமாக கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்.