என். சொக்கன்

ஏ.ஆர். ரஹ்மான்

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788184931877_ Category:
Title(Eng)

A.R. Rahman

Author

Pages

176

Year Published

2009

Format

Paperback

Imprint

சிறுவயதிலேயே தந்தையை இழந்த பிறகு, திலீப்புக்குத் துணையாக வாய்த்தது வறுமைதான். உழைத்தால்தான் அடுத்தவேளை உணவு என்ற சூழலில் அவருக்குக் கைகொடுத்தது சிறுவயதில் தந்தையிடமிருந்து கற்க ஆரம்பித்த இசை. இசைதான் திலீப்பை வளர்த்தது. ஆதரவளித்தது. ஆளாக்கியது. ஏ.ஆர். ரஹ்மானாக அடையாளமும் பெற்றுத் தந்தது.எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரி இசை. ரஹ்மானின் அடிப்படை ஃபார்முலா இதுவே. தனக்குக் கிடைத்த விளம்பரப் பட வாய்ப்புகளில் அதைத்தான் செய்தார். ரோஜாவில் திரை திறந்தது. அதன் பின் அசுர வளர்ச்சி. இளவயதிலேயே இமாலய சாதனைகள். இசைக்கு ரஹ்மான் என்றால் படத்தின் பாதி வெற்றி உறுதி. படம் வியாபாரமாகிவிடும். ஆக, இன்று பெரிய இயக்குநர்கள் எல்லாம் ரஹ்மானுக்காகக் காத்திருந்து படம் எடுக்கிறார்கள்.குண்டுச் சட்டிக்குள்ளேயே ஓடாமல், பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லைகள் தாண்டி இயங்கி, உலகின் செவிகளை தன் வசப்படுத்த ரஹ்மான் செய்த முயற்சிகள் பிரமிப்பானவை. இசையைத் தாண்டிய அவரது தனிப்பட்ட எளிய வாழ்க்கை அதைவிட பிரமிப்பானது. இந்தப் புத்தகம் அதை நமக்குத் தருகிறது.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:சரவணகுமரன் – 24-11-09ஜோக்கிரி – 06-11-09சாய் – 28-10-09