Title(Eng) | Idhaya Nalam |
---|---|
Author | |
Pages | 128 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
இதய நலம்
நலம்₹ 70.00
Out of stock
மனித உடல் உறுப்புகளிலேயே மிக முக்கியமானது இதயம். நம்மை ‘இயக்கும்’ மூளை இயங்குவதற்கும் இதயத்தின் பங்களிப்பு உள்ளது. நம் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் நன்றாக இயங்க வேண்டும் என்றால் பிராண வாயு (ஆக்ஸிஜன்) கலந்த ரத்தம் மிகவும் அவசியம். அந்த ரத்தத்தை உடல் முழுவதும் அழுத்தத்தோடு பாய்ந்து ஓடச் செய்வது இதயம்தான். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இதயத்தை நன்றாகப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.இதயம் எப்படி இயங்குகிறது? இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?மாரடைப்பு என்றால் என்ன? அதைத் தவிர்ப்பது எப்படி?இதயத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன?இதயம் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?அதிகப்படியான உடற்பயிற்சியும், உடலுறவும் இதயத்தைப் பாதிக்குமா?என்பது உள்ளிட்ட இதய நலம் குறித்த அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்தப் புத்தகம் பதில் அளிக்கிறது. இதயத்தின் லப்-டப் ஒலிதான், லெஃப்ரைட் என்று சொல்லி நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தை ஓடவைக்கிறது என்ற உண்மையைச் சொல்லி, இதயத்தைப் பாதுகாப்பது நம்முடைய வாழ்க்கையையே பாதுகாப்பதற்குச் சமம் என்று அதற்கான ஆலோசனைகளையும் அள்ளித் தருகிறது இந்தப் புத்தகம்.