வால்மார்ட்


Author:

Pages: 144

Year: 2009

Price:
Sale priceRs. 130.00

Description

சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள்.சிறிய மீனுக்குக் குறி வைத்து பெரிய திமிங்கிலத்தையே வளைத்துப் பிடித்தவர் சாம் வால்ட்டன். அவர் வால்மார்ட் ஸ்டோரை ஆரம்பித்தது அமெரிக்காவின் மூலையிலுள்ள ஒரு சிற்றூரில். பல வருடங்கள் அவர் சிறிய நகரங்களைத்தான் தொடர்ந்து குறி வைத்தார். சில வருடங்களில் வால்மார்ட் தனிக்காட்டு ராஜாவாக பிரதிநிதித்துவம் அடைந்தது. பிறகு பெரிய நகரங்களிலும் இதர நாடுகளிலும் வால்மார்ட்டின் கொடி உயரப் பறக்க ஆரம்பித்தது. இன்று வால்மார்ட் அமெரிக்காவின் முக்கிய அடையாளம். எத்தனையோ டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கு மத்தியில் வால்மார்ட் மட்டும் ராஜாவானது எப்படி? சாம் வால்ட்டனின் நிர்வாகத் திறமைகள் என்னென்ன? பைசா குறையாமல் எப்படி தன் வியாபாரத்தில் வால்மார்ட் கறாராக இருக்கிறது? எந்த ஒரு சக்தி இன்றுவரை வால்மார்ட்டின் பெரிய பலம்?எஸ்.எல்.வி. மூர்த்தியின் சுவாரசிய நடையில் வால்மார்ட்டின் வரலாறும் செயல்பாடுகளும் இந்நூலில் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

You may also like

Recently viewed