சைபர் க்ரைம்


Author:

Pages: 168

Year: 2009

Price:
Sale priceRs. 115.00

Description

சாட்டிங் தொடங்கி பேங்க்கிங் வரை சர்வமும் இப்போது இணையங்களில்தான் நடத்தப்படுகின்றன. அல்லது செல்பேசிகளில். திருட்டுகள் அதிகம் நடைபெறுவதும் இங்கேதான். மொபைல் ஃபோனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது தொடங்கி இணையத்தள வங்கிக் கணக்கை ஹைஜாக் செய்வது முதல் பல்வேறு மோசடிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. விதவிதமாக தூண்டில் போட்டு வகையாக மாட்டவைத்து, முடிந்தவரை அபகரித்துவிடுவார்கள். எத்தனை திறமையாக, எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், எங்காவது, எப்படியாவது சறுக்கல் ஏற்பட்டுவிடுகிறது. காஸ்ட்ரோவின் மகன் முதல் கடைக்கோடியில் உள்ள சாமானியன் வரை அனைவரும் சைபர் க்ரைமுக்கு இரையாகிவிடுகிறார்கள்.எனில், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாதா? முடியும். தூண்டிலில் இருந்து தப்ப வேண்டுமானால், வெறும் எச்சரிக்கை உணர்வு மட்டும் போதாது. எது தூண்டில் என்பதையும் தூண்டிலை வீசுபவர்கள் எப்படியெல்லாம் இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மீள்வதற்கான வழிகளையும் தெரிந்துகொள்ளவேண்டும். குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த விறுவிறுப்பான தொடர்,இப்போது நூல் வடிவில்.

You may also like

Recently viewed