Title(Eng) | Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal |
---|---|
Author | |
Pages | 192 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
சூப்பர் ஹிட் சினிமா : பாலிவுட் வெற்றிக் கதைகள்
கிழக்கு₹ 100.00
Out of stock
இந்திய சினிமாவின் அடையாளம் என்றால் அது இந்தியாவுக்கு வெளியே பாலிவுட்தான். உலகிலேயே அதிக படங்களைத் தயாரிக்கும் பாலிவுட்டுக்கு உலகம் முழுக்க மார்க்கெட் உண்டு. ராஜ் கபூர், அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் போன்ற பல பாலிவுட் கலைஞர்கள் சர்வதேச கவனம் பெற்றவர்கள். பாலிவுட்டின் வரலாறு 1913 லிருந்து தொடங்குகிறது. புராணக் கதைகளைச் சொல்லி மக்களை டெண்ட் கொட்டாய்க்கு இழுத்த பாலிவுட் இன்று ரோபோ, சூப்பர்-மேன், வேற்றுகிரகவாசி போன்ற கதாபாத்திரங்களால் ஒருபக்கம் ஹாலிவுட்டுக்கு இணையாகவும் இன்னொரு தடத்தில் தி வெட்னஸ்டே, மான்சூன் வெட்டிங், தாரே ஜமீன் பார், வாட்டர், பிளாக் போன்ற படங்கள் மூலம் உலக சினிமாவுக்கு இணையாகவும் முன்னேறியிருக்கிறது. அதே சமயம் வெகுஜன ரசிகர்களுக்கு அது குறை வைப்பதில்லை. ராக் ஆன், தேவ் டி, கமீனே என்று மாறுபட்ட தளத்திலும் பயணித்து தன்னை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது பாலிவுட்.ஹிந்தி திரை உலகின் சூப்பர் ஹிட் படங்களை சுவாரசியமான நடையில் அலசும் இந்நூல், பாலிவுட்டின் வரலாற்றையும் ஊடாக வெளிப்-படுத்து-கிறது. நூலாசிரியர் ப்ரஸன்னா பத்திரிகையாளர். திரைத்துறையைச் சேர்ந்தவர்.