மார்க்கெட்டிங் யுத்தங்கள்


Author:

Pages: 160

Year: 2009

Price:
Sale priceRs. 100.00

Description

ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன். எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும் திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, மார்க்கெட்டிங்கில். மார்க்கெட் என்பது போர்க்களம். லிப்ஸ்டிக் முதல் லேப்டாப் வரை எதைத் தொட்டாலும் ஆயிரம் பிராண்டுகள். அனைத்தையும் மீறி, நம் தயாரிப்பு நிலைக்கவேண்டுமானால், பரவலான வாடிக்கையாளர்களைச் சென்றடையவேண்டுமானால், லாபம் கொழிக்கவேண்டுமானால், போட்டி-யாளர்கள் அனைவரையும் வீழ்த்தியாகவேண்டும். ஒரு முறை அல்ல, பல முறை. ஓயாமல் தொடரும் போர் இது. இன்று பிரபலமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அத்தனை தயாரிப்புகளும் போர்க்களத்தில் பல சவால்களைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றன. கோக், பெப்ஸி, ரிலையன்ஸ், பாம்பே டையிங், யூனிலிவர், நிர்மா, இன்டெல், காட்பரீஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கடைபிடித்த திறமையான மார்க்கெட்டிங் போர் தந்திரங்களை இந்நூல் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. ஒரு நிர்வாகவியல் கல்லூரியில் இணைந்து பயிலவேண்டிய நுணுக்கமான பல பாடங்களை, சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் பகிர்ந்துகொள்கிறார் எஸ்.எல்.வி. மூர்த்தி. மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பயன்படப்போகும் நூல் இது.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:பிச்கைக்காரன் - 18-03-10

You may also like

Recently viewed