நோய் தீர்க்கும் இசை


Author:

Pages: 136

Year: 2009

Price:
Sale priceRs. 70.00

Description

மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுடன் அந்தரங்கமான, ரகசியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது இசை. கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, காதல், நகைச்சுவை என பல்வேறு உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் இசையால் உருவாக்க முடிகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், மனதுக்கும் உடலுக்கும் இடையே ஒரு சம நிலை இருக்க வேண்டும். இந்தச் சமநிலை பாதிக்கப்படும்போதுதான் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.இசைக்கும் மனத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை மையமாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட சமநிலையைச் சரி செய்ய இசையை ஒரு மருந்தாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இசைச் சிகிச்சையின் அடிப்படை. இசைச் சிகிச்சை என்ற மருத்துவமுறையின் முக்கியமான அம்சங்களை முன் வைக்கும் இந்தப் புத்தகம், இசையின் பல்வேறு வகைகளையும் நுணுக்கங்களையும் எப்படிப் புரிந்துகொள்வது?இசை நம் மனத்தோடும் உடலோடும் எத்தகைய தொடர்பைக் கொண்டிருக்கிறது?இசைச் சிகிச்சையை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்?என்னென்ன ராகங்கள் என்னென்ன பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுகின்றன?போன்ற பல சுவாரசியமான கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. மேலும், இசை மருத்துவம் என்பது ஃபிசியோதெரபிபோல் ஒரு துணை வழி மருத்துவமுறை என்பதைப் பதிவு செய்வதுடன், இசையினால் கிடைக்கும் மருத்துவப் பலன்களைத் தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறது. இசைக்கூறுகளை அறிவியல் நுட்பத்துடன் கையாள்வதன் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும் என்பதையும் ஆணித்-தரமாகச் சொல்கிறது.

You may also like

Recently viewed