நெல்சன் மண்டேலா

Save 9%

Author:

Pages: 224

Year: 2009

Price:
Sale priceRs. 260.00 Regular priceRs. 285.00

Description

தமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை.மனிதனுமல்லாத விலங்குமல்லாத ஒரு நிலையில் தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஓர் உயிரி மனிதனாக மாறுவதற்கு சுதந்தரம் தேவை; அந்த சுதந்தரத்தை அடைய வீரஞ்செறிந்த ஒரு நீண்ட போராட்டம் தேவை என்பதை மண்டேலா புரியவைத்தார்.மண்டேலாவின் அமைதிப் போராட்டம் அரசு வன்முறையால் பாதை மாறியபோது, அகிம்சையின் சகாப்தம் முடிந்துவிட்டதை அவர் அறிவித்தார். நிறத்தின் பெயரால், இனத்தின் பெயரால் ஆப்பிரிக்கர்களை ஒடுக்கிக்கொண்டிருந்த வெள்ளையின அரசுக்கு எதிராக மண்டேலா தீவிரப் போர்ப் பிரகடனம் செய்தார்.பரிதாபமான, பலவீனமான வாழ்நிலையில் இருந்த ஆப்பிரிக்க கறுப்பர்களை மனிதர்களாக உணரச் செய்தார் மண்டேலா. பிறகு, தேசியவாதிகளாக. பிறகு, போராளிகளாக. வரலாற்றின் மிக நீண்ட சிறைவாசியாக, கறுப்பின மக்களின் மீட்பராக, இனஒதுக்கல் எதிர்ப்பாளராக, மனித உரிமைக் காப்பாளராக, மானுடத்தின் அடையாளமாக மண்டேலா இன்று அறியப்படுகிறார்.மண்டேலாவின் வாழ்க்கையினூடாக தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வரலாறு.

You may also like

Recently viewed