Title(Eng) | Maoist |
---|---|
Author |
மாவோயிஸ்ட்
₹ 160.00
In stock
நக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறைக் கண்முன் நிறுத்தும் பா. ராகவன், மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூலில் அலசுகிறார்.அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின்மீது பட்டவர்த்தனமாகப் போர்ப் பிரகடனம் செய்யும் துணிச்சல் மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் ஆகப் பெரும் முதல் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளை வருணிக்கிறது இந்திய அரசு. இந்தியாவின் முதன்மையான விரோதி என்று அரசாங்கத்தை அழைக்கிறார்கள் மாவோயிஸ்டுகள். அரசு நிர்வாகம் எங்கெல்லாம் முடங்கியிருக்கிறதோ, எங்கெல்லாம் வளர்ச்சியின்மை பரவியிருக்கிறதோ, எங்கெல்லாம் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறதோ அங்கெல்லாம் மாவோயிஸ்டுகள் ஊடுருவி அப்பகுதிகளை விடுவிக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளை அவர்களே ஆள்கிறார்கள். ஆந்திரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பிகார், ஒரிஸ்ஸா என்று பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பெற்றுள்ள மக்கள் ஆதரவு மிகப் பெரிது. அதே சமயம், மாவோயிஸ்டுகள் மேற்கொள்ளும் யுத்தத்தில் சிக்கி உயிர் துறப்பவர்களும் இதே மக்கள்தாம் என்னும் போது அவர்கள் சித்தாந்தமும் நோக்கமும் கேள்விக்குள்ளாகிறது. இடது சாரி சித்தாந்தத்தால் உந்தப்பட்டு செயலாற்றும் இயக்கம் எனில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இருப்பது ஏன்? அதைவிட விந்தை, மாவோயிஸ்டுகளின் போர், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எதிரானது என்பதுதான்.