செல்லமுத்து குப்புசாமி

ஒலிப் புத்தகம் : பிரபாகரன் ஒரு வாழ்க்கை

 103.00

In stock

SKU: 9788184933659_ Category:
Title(Eng)

Prabhakaran Oru Vazhkai

Author

Year Published

2009

Format

ஒலிப் புத்தகம்

பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்னும் சர்ச்சைக்கு தீர்மானமான ஒரு விடையை அளிக்க முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர் ஒருவேளை இறந்திருந்தாலும், அவர் சகாப்தம் முடிவுறாது.பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு தனியொரு அரசாங்கத்தை நடத்தி உலகை ஆச்சரியப்பட வைத்தது. காவல் துறை, நீதி மன்றம், தரைப்படை, கடற்படை, வான் படை என்று ஒரு தேசத்திடம் இருக்கவேண்டிய அனைத்தும் அவர்களிடம் இருந்தன. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முன்னால் இலங்கை இனப் பிரச்னையின் முழு வரலாறையும் புரிந்துகொள்வது அவசியம். சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இடைவிடாமல் நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தின் ஆணி வேர் எது? யார் தொடங்கினார்கள்? ஏன்? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தீ எரிந்துகொண்டிருக்கப்போகிறது? பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை.