Title(Eng) | Muthollayiram |
---|---|
Author | |
Pages | 272 |
Year Published | 2010 |
Format | Paperback |
Imprint |
முத்தொள்ளாயிரம்
கிழக்கு₹ 185.00
In stock
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, முத்தொள்ளாயிரம். பாடலாசிரியர் அல்லது ஆசிரியர்களின் பெயர் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல் என்னும் வீதத்தில் மொத்தம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால், நமக்குக் கிடைத்திருப்பவை, 108 பாடல்கள் மட்டுமே.மூவேந்தர்களின் வீரம், ஆட்சித் திறன், காதல் என்று அகம், புறம் இரண்டின் கலவையையும் இந்தப் பாடல் தொகுப்பு சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. அரிய செய்திகளுக்காகவும் அளவிட இயலாத இலக்கியச் சுவைக்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் வரும் உன்னத இலக்கிய நூல் இது. தமிழோவியம் இணைய இதழில் வெளியான தொடரின் நூல் வடிவம்.