Title(Eng) | அகதி வாழ்க்கை (ஓர் இலங்கைத் தமிழ் அகதியின் அனுபவக் குறிப்புகள்) |
---|---|
Author | |
Pages | 192 |
Year Published | 2010 |
Format | Paperback |
Imprint |
அகதி வாழ்க்கை (ஓர் இலங்கைத் தமிழ் அகதியின் அனுபவக் குறிப்புகள்)
கிழக்கு₹ 100.00
Out of stock
அகதிகள் எப்படி உருவாகிறார்கள்? எந்த நம்பிக்கையுடன் ஓர் அந்நிய நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்? அனைவருக்கும் புகலிட அனுமதி கிடைத்துவிடுகிறதா? கிடைக்காதவர்களின் கதி? ஐரோப்பாவில் குடியேறிய பல ஈழத் தமிழர்கள் செல்வத்துடனும் செழிப்புடனும் வாழும்போது, அதே ஐரோப்பாவில் பலர் வீடின்றி, வேலையின்றி அங்கீகாரம் இன்றி அவதிப்படுவது ஏன்? சிலர் உயிரைக் காக்க ஓடுகிறார்கள். சிலர், அரசியல் காரணங்களுக்காக. சிலர், பொருள் ஈட்டுவதற்காக. காரணங்கள் பல. நோக்கம் ஒன்றுதான். எப்படியாவது புகலிடத்தில் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்.பல நூறு கனவுகளைச் சுமந்தபடி வந்து சேரும் அகதிகள், நம்பிக்கை இழந்து, அடையாளம் தொலைத்து, ஆயிரம் பிரச்னைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.நூலாசிரியர் கலையரசன் இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து தன் அனுபவங்களை விவரித்திருந்தாலும், பிற தேசத்து அகதிகள் குறித்த ஒரு தெளிவான பார்வையும் இதில் காணக்கிடைக்கிறது. ஒரு தனி நபரின் வாழ்க்கைக் குறிப்பு அல்ல இது. இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த முழுமையான அரசியல் ஆவணம்.இப்புத்தகம் பற்றிய விமர்சனங்கள்:தினத்தந்தி – 19-அக்டோபர்-2010