ராஜராஜ சோழன்


Author:

Pages: 134

Year: 2010

Price:
Sale priceRs. 150.00

Description

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.

You may also like

Recently viewed