வலிப்பு நோய்கள்


Author:

Pages: 136

Year: 2010

Price:
Sale priceRs. 170.00

Description

இது சாபமோ, முன் ஜென்ம வினையோ அல்ல. இது ஒரு நோய், அவ்வளவுதான். வலிப்பு நோயாளி ஆகிவிட்டால், வாழ்க்கை அவ்வளவுதான் என்ற நிலை இப்போதைக்கு இல்லை. அதுவும், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், முழுமையாகக் குணமாக்கிவிடலாம் என்ற அளவுக்கு மருத்துவத் துறை முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில், வலிப்பு - அதன் வகைகள் - அறிகுறிகள் என்னென்ன? வலிப்பு வந்தால், செய்ய வேண்டியது - செய்யக் கூடாதது என்னென்ன? வலிப்புக்கான முக்கியக் காரணங்கள் என்னென்ன? வலிப்புக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா? குழந்தைகள், பெண்கள், வயதானவர்களுக்கு வரும் வலிப்புகளுக்கு என்ன வேறுபாடுகள்? என்பது உள்ளிட்ட, வலிப்பு நோய் குறித்த அனைத்துத் தகவல்களும், விரிவாகவும், எளிமையாகவும், முழுமையாகவும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன. வலிப்பு நோயால், வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்பட்டு, மீதமுள்ள வாழ்நாளை விரக்தியோடு கழிக்கத் தேவையில்லை; சிகிச்சைகள், மருந்துகள் மூலம் வலிப்பைக் கட்டுப்படுத்தி, மகிழ்ச்சியோடு வாழலாம் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் அளிக்கிறது இந்தப் புத்தகம்.

You may also like

Recently viewed