பத்மன்

தத்துவ தரிசனங்கள்

கிழக்கு

 300.00

Out of stock

SKU: 9788184937077_ Category:
Title(Eng)

Thathuva Darisanagal

Author

Pages

352

Year Published

2017

Format

Paperback

Imprint

இந்திய தத்துவ தரிசனங்களின் சுருக்கமான, அழுத்தமான அறிமுகம்.கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்; பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்; ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்; ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலைப் போதிக்கும் பௌத்தம்…பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்ந்து ஆன்மாவை வலியுறுத்தி ஆண்டவனை மறுக்கும் சாங்கியம்; அணுக்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் வைசேஷிகம்; காரண – காரிய வாதங்களை அலசி ஆராயும் நியாயம்; உடல்-மன கட்டுப்பாடுகள், பயிற்சிகள் மூலம் உண்மையை அறிய முயலும் யோகம்; வேள்விகள் உள்ளிட்ட கடமைகளைச் செய்வதை வலியுறுத்தும் மீமாம்சை…தத்துவ விசாரணையையும் கடவுளையும் வலியுறுத்தும் வேதாந்தம் அதன் உட்பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், அபேதபேதவாதம்; இந்த வேதாந்தத்தில் இருந்து வேறுபட்டு சிவமே பμம் என்று கூறும் சித்தாந்த சைவம்; சித்தாந்த சைவத்தோடு முரண்பட்ட பாசுபதம், காளாமுகம், காபாலிகம்; மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டை முன்னிறுத்தித் தோன்றிய தாந்திரீகம்…வழிபடு கடவுளை வரித்துக்கொண்டு எழுந்த சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், ஐந்திரம்; பிற்காலத்தில் தோன்றிய சீக்கியம், பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்கள் இந்தியாவில் பல்கிப் பெருகின, பெருகி வருகின்றன.இத்தகைய அனைத்து இந்திய தத்துவ தரிசனங்களையும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எளிய நடையில் தொகுத்துக் கூறும் முக்கியமான நூல்.தினமணி.காமில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.