சரவணன் சந்திரன்

வெண்ணிற ஆடை

கிழக்கு

 130.00

In stock

SKU: 9788184938432_ Category:
Title(Eng)

veṇṇiṟa āṭai

Author

format

Year Published

2017

Imprint

சாம்பல் உலகில் உலவும் மனிதர்கள் இவர்களென ஒரு வரியில் கடந்துவிடமுடியாது. வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களின் வழியாகவும் வாழ்ந்து பார்த்தவர்கள் இவர்கள். ஒருவகையில் வேகமான நெடுஞ்சாலைப் பயணத்திற்குத் தேவையான வேகத் தடைகளும்கூட இவர்களே.

வெள்ளை உலகம் எனச் சொல்லப்படும் உலகத்தின் நியாய தர்மங்களுக்கு இங்கே வேலையே இல்லை. தங்களது வாழ்வையே பணயமாக வைப்பதன் வழியே பாதுகாப்பான உலகத்திற்கான ஒளியை ஏந்தித் தருகிறார்கள். தங்களது சிதறல்களின் வழியே வாழ்வதற்கான நம்பிக்கையையும் விதைக்கிறார்கள்.

ஏளனமாகக் கடந்து போகும் இவ்வாழ்வு, புதிய திறப்பை வாசிப்பவர்களுக்கு அளிக்கலாம்; அளிக்காமல் போகலாம். ஆனால் இவர்களைக் கடந்து போக முடியாது. ஏனெனில் கடக்கவே முடியாத காலத்தின் மனசாட்சி இந்தக் கதைகள்.