Silai Thirudan/சிலைத் திருடன்


Author: எஸ். விஜய் குமார்

Pages: 240

Year: 2019

Price:
Sale priceRs. 250.00

Description

தமிழில்: B.R.மகாதேவன்இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு, பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை.***‘பரபரப்பான புத்தகம்...’ - எகனாமிக் டைம்ஸ்‘இந்தியாவின் பாரம்பரியத்தை மிகப் பெரிய அளவில் கொள்ளை அடிக்கும் குழுவைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம்...’ - ஓபன்‘சமீபத்தில் நான் படித்த மிக அருமையான புத்தகம்...’ - சஞ்சீவ் சன்யால்***சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவந்த கலைப் பொருள் வணிகன். அவன் விற்பனை செய்த கலைப் பொக்கிஷங்கள் உலகின் முன்னணி அருங்காட்சியகங்களை அலங்கரிக்கின்றன. அக்டோபர் 2011இல் ஜெர்மனியில் இண்டர்போல் அவனைக் கைது செய்தது. அதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக இந்திய அரசு, தமிழகத்தின் இரண்டு கோவில்களில் இருந்து அரிய, விலை மதிக்கமுடியாத சோழர் காலச் சிலைகளைத் திருடிக் கடத்தியதாகக் குற்றம்சாட்டி அவனுக்கு ரெட்-கார்னர் நோட்டீஸ் தந்திருந்தது.அமெரிக்கக் காவல்துறை அதிகாரிகள் நியூ யார்க்கில் இருந்த சுபாஷ் கபூரின் கிடங்கை அதிரடியாகச் சோதனையிட்டபோது, சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியக் கலைப் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘உலகிலேயே மிகப்பெரிய கலைப் பொருள் திருடன்’ என்று அமெரிக்க காவல்துறை இவனை அறிவித்தது.கூட்டுக் குற்றவாளிகளான காவல்துறையினர், அருங்காட்சியக ஊழல் பேர்வழிகள், துரோகத்தால் கைவிடப்பட்ட பெண்கள், இரட்டை வேடம் போடும் ஆய்வறிஞர்கள், கூலிச் சிலைத் திருடர்கள், கடத்தல்காரர்கள் என இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் உலகம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. 21ம் நூற்றாண்டின் மாபெரும் கிரிமினல் வலைப்பின்னல் இந்தியாவின் அரிய கோவில் கலைப் பொக்கிஷங்களை எப்படிக் கொள்ளையடித்தது என்பதை விறுவிறுப்பூட்டும் நடையில் விவரிக்கிறது இந்த அரிய நூல்.

You may also like

Recently viewed