ஹரன்பிரசன்னா

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் பாகம்-2

தடம் பதிப்பகம்

 170.00

SKU: 9788194660972_ Category:
Title(Eng)

Nadunilaimai Atravanin Tamil Cinema Kurippugal (Part-2)

Author

Pages

208

format

Year Published

2020

Imprint

புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்த் திரையுலகம் அரசியல் பற்றி நிறையப் பேசத் துவங்கி இருக்கிறது. வரவேற்கத்தக்க மாற்றம்தான். ஆனால் அவை அனைத்துமே ஒரு சார்புடனும் ஒரு முன்முடிவுடனுமே இருக்கின்றன. உண்மையை நோக்கிய பயணமும் அறமும் அதில் இல்லை. வாய்ப்பரசியலைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் மட்டுமே உள்ளது. வெளிப்படையான அரசியல் திரைப்படங்கள் ஒரு பக்கம் என்றால், சாதாரணத் திரைப்படங்களில் வரும் அரசியல் வசனங்கள், பின்னணிக் காட்சிகள் மற்றும் குறியீடுகள் ஆகியவையும் கூட உள்நோக்கத்தோடுதான் வைக்கப்படுகிறன. இவர்களது நோக்கம் ஒன்றுதான் – ஹிந்து மத எதிர்ப்பும், இந்திய எதிர்ப்பும்.

தொடர்ச்சியாக எப்படி ஹிந்து மத வெறுப்பும் இந்திய எதிர்ப்பும் ஹிந்துத்துவக் கண்டனங்களும் தமிழ்த் திரையுலகில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதை இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் காணலாம். நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ மற்ற மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பா