பாரதி என் காதலன்


Author: நெல்லை கணேஷ்

Pages: 86

Year: 2020

Price:
Sale priceRs. 100.00

Description

பாரதியாரின் பாடல்கள் பிரபலமான அளவுக்குப் பாரதியின் கட்டுரைகள் பிரபலமாகவில்லை. பாரதி தன் பாடல்களில் நெருப்பைப் போல உண்மைத் தன்மையுடனும் கவிப்பித்து நிலையிலும் வெளிப்பட்டான் என்றால், கட்டுரைகளில் ஆழ்ந்த சிந்தனையுடனும் விரிவான அலசலுடனும் வெளிப்பட்டான். நாம் இன்றும் வியப்பு கொள்ளும் அளவுக்கு, பாரதியின் கட்டுரைகள் மிகவும் ஆழமானவை, விரிவானவை.

பாரதி தன் வாழ்க்கையிலிருந்தே எழுதினான், எழுத்தையே வாழ்க்கையாகக் கருதினான். இம்மியளவும் இரண்டுக்கும் இடையே எவ்வித வித்தியாசத்தையும் அவன் பார்க்கவில்லை. யாரும் எளிதில் கைக்கொள்ளவே முடியாத மோன நிலை அது. அதை பாரதி தன் வாழ்க்கை முழுமைக்கும் கடைப்பிடித்தான்.

வாழ்வே எழுத்தாக, எழுத்தே வாழ்வாக வாழ்ந்த ஒரு மகாகவியின் வாழ்க்கைச் சித்திரங்களில் சிலவற்றைக் கற்பனையுடன் கலந்து சொல்லும் முயற்சியே இந்தப் புத்தகம். பாரதியை இன்னும் அணுக்கமாக அணுகிப் பார்க்க இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

--

கணேஷ் லட்சுமிநாராயணன் (நெல்லை கணேஷ்) கிண்டி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் B.E பட்டமும், அமெரிக்காவின் ஆன் ஆர்பர் பல்கலைக்கழகத்தில் (University of Michigan, Ann Arbor)MBA பட்டமும் பெற்றவர்.

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பல பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்தார். டெல் (Dell) கம்பெனியில் பல வருடங்கள் பணியாற்றி, அதன் இந்தியக் கிளைக்கு நிர்வாக இயக்குநராக (President & MD) உயர்ந்தார். தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் பெரு நிறுவனங்கள் பிரிவின் சிஈஓ ஆகப் பணியாற்றுகிறார்.

அவர் எழுதிய முதல் புத்தகம் ‘தாமிரபரணி என்னும் சிநேகிதி’ (கட்டுரைத் தொகுப்பு). இது இரண்டாவது புத்தகம்.

இப்புத்தகத்தில் இருக்கும் பாரதி ஓவியங்கள் மணியம் செல்வன் அவர்கள் வரைந்தவை.

You may also like

Recently viewed