ஜெயமோகன்

செந்நா வேங்கை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

கிழக்கு

 1,100.00

In stock

SKU: 9789351350422_ Category:
Title(Eng)

cennā vēṅkai – makāpāratam nāval vaṭivil (cempatippu)

Author

format

Imprint

மகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்குருதி விழுகிறது. எரியில் விழும் முதல்துளி நெய்போல.

 

போரெழுகையின் ஓவியம் இந்நாவல். போர் என்பது புறத்தே நடப்பது மட்டுமல்ல. குருக்ஷேத்திரம் எவ்வகையிலோ எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து உயிர்களிலும். அனைத்து உடல்களிலும். அனைத்து உள்ளங்களிலும். இது அந்த முடிவிலாச் சமரின் கதை.

 

 

செந்நா வேங்கை – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினெட்டாவது  நாவல். 

 

848 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 

 

விபிபி கிடையாது.