சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

போட்டுத் தள்ளு

கிழக்கு

 225.00

In stock

SKU: 9789351351719_ Category:
Title(Eng)

Pottu Thallu

Author

Pages

200

Year Published

2014

Format

Paperback

Imprint

நீங்கள் சுயதொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்களை நீங்கள் கவரவேண்டும். உங்கள் ப்ராண்ட்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்.ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பலரும் கணைகளை வீசுகிறார்கள். அவர்கள் அனைவரும் உங்கள் போட்டியாளர்கள். தேர்தலில் உங்களுக்கு வாக்கு விழவேண்டும் என்றால் உங்கள் போட்டியாளருக்கு வாக்கு விழக்கூடாது. அவரைவிட உங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால்தான் நீங்கள் ஜெயிக்க முடியும். இங்கே பாவ புண்ணியத்துக்கு இடமே இல்லை. உங்கள் பொருள் ஜெயிக்கவேண்டும் என்றால் போட்டியாளர் பொருள் தோற்றே ஆகவேண்டும். நீயும் இரு, நானும் இருக்கலாம் என்று விட்டுவிட்டால் போட்டியாளர்கள் உங்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரேயொரு வேலைதான் இருக்கிறது. நேர்முகத் தேர்வுக்கு உங்களைப்போல் நான்கு பேர் வந்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் உங்கள் போட்டியாளர்கள், உங்கள் எதிரிகள். அவர்களை வீழ்த்தாவிட்டால் உங்களுக்கு வேலை கிடையாது.எந்தத் துறையாக இருந்தாலும் சரி, போட்டியாளர்களைப் பற்றியும் அவர்கள் போட்டி போடும் விதத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் வெற்றி சாத்தியமே இல்லை. நீங்கள் எதிராளிக்குக் குழி பறிக்கிறீர்களோ இல்லையோ, குறைந்தபட்சம், எதிராளிகள் நமக்கு எப்படிக் குழி பறிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதிலிருந்து மீளவாவது வேண்டுமே!மார்க்கெட்டிங் துறையில் ஆலோசகராக இருக்கும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி மார்க்கெட்டிங் தொடர்பாக எழுதும் தொடர் புத்தகங்களில் இது நான்காவது புத்தகம். மிகவும் முக்கியமான புத்தகமும்கூட.