இரா. முருகன், என்.எஸ். மாதவன்

பீரங்கிப் பாடல்கள்

கிழக்கு

 450.00

In stock

Title(Eng)

pīraṅkip pāṭalkaḷ

Author

,

format

Year Published

2018

Imprint

 

பீரங்கிப் பாடல்கள், என்.எஸ். மாதவன் ,தமிழில்: இரா. முருகன், கிழக்கு பதிப்பகம்

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற "Lanthan Batheriyile Luthiniyakal" நாவல் முதல்முறையாக இப்போது தமிழில்.

1951ல் தொடங்கி 1967 வரையிலான ஜெசிக்காவின் பதினாறு ஆண்டுகால வாழ்க்கை என்று இந்நாவலைச் சுருக்கமாக அழைக்கலாமா? அல்லது கம்யூனிஸ்டுகளும் பாதிரிமார்களும் தச்சர்களும் சமையல்காரர்களும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் தையல்காரர்களும் நிறைந்திருப்பதால் இது அந்த மனுஷர்களையெல்லாம் பற்றிய ஒரு விரிவான நாவல் என்று சொல்லலாமா? எனில், எப்படி இதில் ஸ்டாலினும் குருஷேவும் வேறு சில நிஜ வரலாற்று ஆளுமைகளும் கலந்திருக்கிறார்கள்? இது நிஜம் பேசும் கதையா அல்லது கதை பேசும் நிஜமா?

வரலாறு, கற்பனை இரண்டையும் நேர்த்தியாகக் குழைத்து வண்ணமயமான ஓர் உலகைத் தனக்கேயுரிய தனித்துவமான மொழியில் படைத்திருக்கிறார் நூலாசியர் என்.எஸ். மாதவன். ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ என்னும் தலைப்பில் மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாவலை இரா. முருகன் ஜீவனுள்ள நடையில் அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

***

"2004ம் ஆண்டின் சிறந்த புத்தகம்." – மலையாள மனோரமா

"காவியக் கற்பனை…மலையாள புனைவிலக்கியத் துறைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கிறார் என்.எஸ். மாதவன்." – தி லிட்டில் மேகஸின்

"‘கடவுளின் நாடு’ என்று கேரளா அழைக்கப்படுவது சரிதான் என்பது இந்நூலை வாசிக்கும்போது புரிகிறது. அவ்வாறு அழைக்கப்படுதற்கு அதன் அழகிய நிலப்பரப்பும் பசுமை கொஞ்சும் மலைகளும் நீர்நிலைகளும் மட்டும் காரணமல்ல, அங்கு வாழும் மக்களும் காரணம்." – குஷ்வந்த் சிங்

***

என்.எஸ்.மாதவன்

மலையாள எழுத்தாளர். 1948-இல் எரணாகுளத்தில் பிறந்தார். மலையாளப் புனைகதை இலக்கியத்தைப் புதுப்பித்தவர்களில் முக்கியமானவர். இலக்கியப் போக்கை நவீனத்துவத்துக்கு மடை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உரியது. 1970-இல் மாத்ருபூமி பத்திரிகை கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘சிசு’ மூலம் மலையாளத்தில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் என்ற இடத்தைப் பிடித்தார். கேரள மாநில சாகித்ய அகாதமி, ஓடக்குழல் விருதுகள் பெற்றவர். மூன்று முறை சிறந்த சிறுகதைக்கான கதா விருது பெற்றவர்.

இரா. முருகன்

1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதை-கள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.