Kizhipadum Kaavi Arasiyal/கிழிபடும் காவி அரசியல்


Author: அ. இருதயராஜ்

Pages: 176

Year: 2019

Price:
Sale priceRs. 200.00

Description

‘கோழையே! உன்னிடம் தோட்டாக்கள்தானே உள்ளன. என்னிடம் அழியா வார்த்தைகள் இருக்கின்றன. நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்’ என்று முழங்கினார் கௌரி லங்கேஷ். ‘எந்த எழுத்தும் சமூகத்தில் மானிட அக்கறையை வெளிப்படுத்தவேண்டும். மேலும், சமூக மாற்றத்திற்கு எழுத்து ஒரு துளி அளவாவது உதவவேண்டும்’ என்றார் இன்குலாப். இந்நூல் இந்த இரு குரல்களின் திசைவழியில் பயணம் செய்கிறது. அந்த வகையில் நேர்மையான, துணிச்சலான ஒரு பங்களிப்பை செலுத்துகிறது.ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு மதவாதமும் இந்துத்துவமும் மையத்துக்கு வந்தது எப்படி? ஒரு மனிதனைவிடப் பசு மாடு முக்கியம் என்னும் நிலை நம்மை எங்கே கொண்டுசெல்லும் என்று நினைக்கிறீர்கள்? சுதந்தரத்தின் குரல், மாற்றுக் கருத்தின் குரல், மாற்றத்துக்கான குரல் நசுக்கப்படுவதை எப்படி எதிர்கொள்வது? இந்துத்துவமும் இந்து மதமும் ஒன்றேதானா? அரசியலும் மதமும் ஒன்று கலப்பது யாருக்கு லாபம், யாருக்குப் பாதகம்? வகுப்புவாத மோதல்களும் சாதிக் கலவரங்களும் அதிகரித்துக்கொண்டிருப்பதற்கும் பொருளாதாரப் பின்னடைவுக்கும் தொடர்பு இருக்கிறதா?உனா முதல் காஷ்மிர் வரை; பண மதிப்பு நீக்கம் முதல் ஜல்லிக்கட்டு வரை; மாட்டுக்கறி முதல் மனிதநேயம் வரை; பத்மாவதி தொடங்கி கௌரி லங்கேஷ் வரை விரிவாகப் பேசும் இக்கட்டுரைகள் காவி அரசியலின் முகத்திரையைக் கிழித்தெறிவதோடு நில்லாமல் அதன் நிஜ முகத்தையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

You may also like

Recently viewed