பா.ராகவன்

யதி

கிழக்கு

 1,000.00

In stock

SKU: 9789386737892_ Category:
Title(Eng)

யதி

Author

Pages

888

Year Published

2020

Format

Paperback

Imprint

இந்திய பூமியில் ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும் பதித்துச் சென்ற தடங்களின் தொகுப்பு நிகரற்றது. இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் பண்பாட்டையும் தொகுத்து நமக்களித்தவர்கள் இந்த யதிகளே. அவர்களது வாழ்வு வினோதமானது. ஒரு கால் உலகத்திலும் இன்னொரு கால் உணர்வு உச்சத்திலும் நிலைகொண்டு அலைபாய்வது.~இந்த நாவல், துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை. இந்தியக் கலாசாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்கவாவது முடியும். அது பா. ராகவனுக்கு கை கூடியிருக்கிறது.~நாம் அறியாத மரபானதொரு பேருலகினை, தகிப்பும் உக்கிரமும் ததும்பும் நவீன மொழியில் பதிவு செய்திருக்கும் யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஓர் அசுர சாதனை.