சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Start-up-Businessil Success/ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ்

கிழக்கு பதிப்பகம்

 275.00

Format

Paper back

Imprint

Pages

240

Author

Year Published

2021

எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்-அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும்.
சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான்.
இதற்கு அஞ்சியே பலர், ‘இதெல்லாம் சிலருக்குதான் சரிப்பட்டு வரும்’ என்று ஏக்கப் பெருமூச்சோடு தங்கள் கனவைக் கனவாகவே முடித்துக்கொண்டு விடுகிறார்கள். அவ்வாறு செய்யத் தேவையில்லை. துணிந்து திட்டத்தில் இறங்குங்கள் என்கிறது இந்நூல்.
என் ஸ்டார்ட்-அப் வெற்றி பெறுமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தெரிந்துகொண்டபிறகு என்ன செய்யவேண்டும்? முதலீட்டுக்கு எப்படி நிதி திரட்டுவது? பார்ட்னர் வைத்துக்
கொள்ளவேண்டுமா அல்லது தனியாகவே ஆரம்பிக்கலாமா?  எப்படி விளம்பரம் செய்வது? எப்படி வாடிக்கையாளர்களைப் பெறுவது? போட்டிகளை எப்படிச் சமாளிப்பது? பயணத்தைத்
தொடங்கிய பிறகு படுகுழிகள் தென்பட்டால் என்ன செய்வது? திறமையாக நிர்வாகம் செய்வது எப்படி?
நிர்வாகவியல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் ஸ்டார்ட்-அப் உலகம் பற்றிய மிகச் சிறந்த அறிமுகத்தை எளிமையாக அளிக்கிறது.
‘இந்து தமிழ் திசை’யின் இணைப்பிதழில் ‘எண்ணித் துணிக!’ எனும் தலைப்பில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம்.