Mu.Ka / மு.க.ஒரு விரிவான வாழ்க்கை வரலாறு


Author:

Pages: 200

Year: 2006

Price:
Sale priceRs. 275.00

Description

அரசியல் களத்தில் மு. கருணாநிதி எனும் ஆளுமையின் இடம் வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது. இப்போது மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் அந்த வெற்றிடம் அப்படியேதான் நீடிக்கும். அவர் ஆளுமை எத்தகையது என்பதை அதுவே நமக்கு உணர்த்திவிடும்.

தமிழக அரசியல் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டவர் என்று மு.க.வைச் சொல்லமுடியும். பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவர்; அண்ணாவின் கொள்கை அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்தவராக என்றெல்லாம் அறியப்பட்டாலும் தனக்கென்று தனித்துவமான ஒரு பாதையை, அணுகுமுறையை, கோட்பாட்டை வகுத்துக்கொண்டவரும்கூட.

50 ஆண்டுகளாக ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். நான்கு முறை முதல்வராக இருந்திருக்கிறார். மறையும்வரை திமுகவின் முதல்வர் வேட்பாளர் அவரே.தொடர்ந்து 13 சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்று, வென்றிருக்கிறார். தமிழக அரசியலின் திசைவழியைத் தீர்மானித்தவர் என்று தயங்காமல் அவரைச் சொல்லலாம்.

இந்திய அரசியல் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தியவர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை ஈட்டியிருக்கிறார். சரிவுகளையும் கடும் சர்ச்சைகளையும் வலுவான எதிர்ப்புகளையும் எதிர்கொண்டிருக்கிறார்.

ஜெ.ராம்கியின் இந்நூல் விருப்பு வெறுப்பின்றி அவர் அரசியல் வாழ்வை உள்ளது உள்ளபடி பதிவு செய்கிறது.

You may also like

Recently viewed