சோம. வள்ளியப்பன்

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

கிழக்கு

 200.00

In stock

SKU: 9789390958481_ Category:
Author

Imprint

Pages

179

Year Published

2022

கம்ப ராமாயணம் என்பது பக்தி இலக்கியமோ தமிழ்க் காவியமோ
மட்டுமல்ல. அள்ள அள்ளக் குறையாத பெரும் செல்வக் குவியல்களைக்
கொண்ட பேரதிசயம் அது. அறிவியல், அரசியல், சமூகவியல் என்று
தொடங்கி இன்று நாம் நவீனம் என்று கருதும் பல துறைகளுக்கான ஆரம்ப
வித்துகளை கம்பர் அன்றே விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
சோம. வள்ளியப்பனின் இந்நூல் கம்ப ராமாயணத்தில் புதைந்து கிடக்கும்
மேலாண்மைச் சிந்தனைகளை அகழ்வாய்ந்து நம்மோடு பகிர்ந்து
கொள்கிறது. நமக்கான இலக்குகளை எவ்வாறு நிர்ணயித்துக்கொள்வது,
அவற்றை நோக்கி எவ்வாறு பயணம் செய்வது, பயணம் செய்வதற்குத்
தகுந்த பயிற்சிகளை எங்கிருந்து பெறுவது என்று தொடங்கி தனி
நபர்களுக்கும் மேலாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் பல
ஆழமான, அற்புதமான ஆலோசனைகளை இந்நூல் நமக்கு அளிக்கிறது.
நவீன நிர்வாகவியல் கோட்பாடுகளை கம்பனின் வரிகளோடு மிகப்
பொருத்தமாக இணைத்து ஒரு ரசவாதத்தை சோம. வள்ளியப்பன்
இந்நூலில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். மேலாண்மையும் இலக்கியமும்,
பழமையும் புதுமையும், இலக்கிய நயமும் நவீன உத்திகளும் இந்நூலில்
ஒன்றிணைகின்றன.