அம்பிகாபதி – அமராவதி காதல் காவியம்


Author: அ.மு.சம்பந்தம் நாட்டார்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 375.00

Description

மனித நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே உயிர்ப்புடன் உள்ள காதலை முன்னிருத்தியுள்ள காவியம். கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு வந்து சென்ற மன்னன் மகள் அமராவதி, அம்பிகாபதியிடம் காதலைக் கற்றுக் கொண்டாள். இந்த காதலை அறிந்த மன்னன், அம்பிகாபதியைக் கைது செய்து குற்றவாளியாக்கினான்.
சிற்றின்பம் கலக்காமல் நுாறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒரு போட்டியை அறிவிக்கிறான் மன்னன். கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நுாறு பாடல்களை பாடியவனை, ஆரத்தழுவிக் கொள்கிறாள் அமராவதி.

கடவுள் வாழ்த்தைச் சேர்க்காமல், 99 பாடல்கள் தான் பாடப்பட்டது எனத் தீர்ப்பு வர, அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவன் இறந்த செய்தி கேட்டு, அவன் மார்பில் விழுந்து அமராவதியும் இறக்கிறாள்.

அம்பிகாபதி – அமராவதி காதல் காவியம், 43 அதிகாரங்களில் எளிய வெண்பா வடிவில் அமைந்துள்ளது. சொற்களுக்கான எளிய பதங்களுடன் சிறப்புற பதிப்பிக்கப்பட்டுள்ளது. இலக்கியக் காதலை எளிமையாக ஆக்கியுள்ள நுால்.

You may also like

Recently viewed