Description
உலகெங்கிலும் உள்ள பெண்களின் ஒரே மொழி கண்ணீர் தான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது பிரியா விஜயராகவனின் "அற்றவைகளால் நிரம்பியவள்" நாவல். மாசற்ற வனச்சுனையென புத்தம் புது மொழி வாசகரை நெருக்கமாக உணரச் செய்கிறது. தனிப்பெண்ணாக வேலை நிமித்தம் வெளிநாட்டிற்கு செல்லும் இந்நாவலின் நாயகி அஞ்சனாவின் பயணம் நெடியது. தமிழிலக்கியப் பரப்பில் தனித்துவ இடத்தைப் பிடிக்கும் இந்நாவலின் வீச்சும், காட்சிகளும், உணர்வுப்பெருக்குகளும் அசலானவை. மருத்துவ உலகின் உள்ளார்ந்த காட்சிகள், மருத்துவரின் கோணத்தில் இதுவரை இவ்வாறு பதிவாகவில்லை. தொழில்முறைமருத்துவராக இருக்கும் பிரியா விஜயராகவன், தனது கைவண்ணத்தில் ஓவியங்களை நாவல் முழுவதும் இடம்பெறச் செய்துள்ளார்..
நாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷியஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரா எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்ககளை சேர்ந்த பண்கள், அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஒரே தேசிய கீதத்தையே உரத்தோ சத்தமில்லாமலோ பாடுகிறார்கள்.அது துயரமெனும் கீதமே.