Description
அடுக்கடுக்காக சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் ‘ஆண்கள் இல்லாத வீடு‘ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதியிருக்கிறார் இமையாள். ஆண்களின் இடையீடு இல்லாத நாளொன்றில் பெண்ணின் இயல்பான புழக்கங்களைக் கூறுகிற கவிதையிது. ஆண்மையவாதக் கவியுலகினைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட கவிக்குரல்களின் அணுத்திறப்பான வெடிப்பினை ஆரம்பம் முதலே கொண்டாடுகிறவன் என்ற வகையில் இந்தத் தொகுப்பின் கவிதைகள் என் கருத்துக்கு வலிமை சேர்க்கிற அளவு சிறப்புமிக்கதாயிருக்கின்றன. இத்தொகுப்பின் மூலம் ‘இமையாள்‘ நம்பிக்கை பொய்க்காத கவிஞராக உருவெடுத்திருக்கிறார். கவிஞர்.கலாப்ரியா