ஆழி சூழ் உலகு


Author: ஜோ டி குரூஸ்

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 750.00

Description

பரதவர்கள் தமிழின் தொன்மையான குடியினர். செவ்விலக்கியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருப்பினும் இவர்களைக் குறித்து நவீன இலக்கியத்தில் குறைவான ஆக்கங்களே காணப்படுகின்றன. அவையும் கரையினின்று கடலைப் பார்த்துத் திகைத்து நிற்பனவாகவே உள்ளன. இக்குறையினைத் தீர்க்கும் முகமாக ஆழிப் பெருங்கடலை, அதை நம்பிப் பிழைக்கும் மனிதர்களை, அவர்களின் அல்லாட்டமான வாழ்க்கைப்பாடுகளை, குல நம்பிக்கைகளை, வரலாற்றுத் தொன்மங்களை அதன் கரிக்கும் உப்புச் சுவையோடு சொற்களில் எழுப்பிக் காட்டியிருக்கும் பெரும் புனைவே இந்நாவல். ஒரு சிறிய மீனவ கிராமத்தின் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான வரலாற்றை, பலநூறு முகங்களின் வழியாக, மூன்று தலைமுறைகளின் வளர்சிதை மாற்றங்களுடன் விரித்துக் கூறும் இந்நாவலின் ஆதாரமான விசையாகக் காலமும் மரணமும் பின்னின்று இயங்குகிறது. எப்படிப் பார்த்தாலும் வாழ்வின் இறுதியாக எஞ்சப் போகும் கழிவிரக்கத்தினின்றும் மனிதன் தப்பிப்பிழைக்க வழி அன்பும் தியாகமும்தான் என்பதே இதன் உள்ளுறையாகத் திரள்கிறது. ஓயாத அலைகள் ஒன்றுகூடி நிறையும் கடல்போல, இச்சைகளால் அலைக்கழியும் தனி மனிதர்களைச் சித்திரிப்பதன் வழியாக வாழ்வெனும் பெரும் நாடகத்தை உருவகித்துக் காட்டிய வகையில் தமிழின் சாதனைகளில் ஒன்றாக இந்நாவல் அமைகிறது.

You may also like

Recently viewed