Description
கவிதாயினி சி.கலைவாணி ஒரு பெண்ணின் தனிமை, நிராகரிப்பு, புறக்கணிப்பு, ஏமாற்றம், துரோகம், துக்கம், இயலாமை, வலி இப்படி எல்லா உணர்ச்சியையும் எண்ணங்களையும் நேரிடையாகச் சொல்லிச் செல்லாமல் அதை ஒரு தாயத்து போல் படிம மொழியாக்கி அதில் மந்திரத் தகடு போல் கவிதைகளைச் சுருட்டிவைத்து குறியீடுகளைக் கயிறெனக் கோத்துக் கட்டுகிறார். எழுதியதும் அதைக் கடந்து விட்ட திருப்தியில் படிம தாயத்தை தமது கண்ணீரில் ரகசியமாய்த் துலக்குகிறார். தாயத்து பளபளப்பாகிறது கூடவே தாயத்துக்குள் புகுந்த கண்ணீர் அந்த துக்க பாஷை கொண்ட செப்புத் தகட்டை பொத்தலாக்குகிறது. இவர் துக்கம் மெல்ல மெல்லக் கரைகிறது. இப்படியாகத்தான் இவரது கவிதை மொழியும் அதன் விளைவுகளும் இருப்பதாக நான் பாவிக்கிறேன்.
- கவிஞர் அமிர்தம் சூர்யா