ஏஐ - ஓர் எளிய அறிமுகம்

Save 5%

Author: சைபர்சிம்மன்

Pages: 320

Year: 2024

Price:
Sale priceRs. 350.00 Regular priceRs. 370.00

Description

ஏஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு, மனித அறிவாற்றலுடன் ஒப்பிடப்பட்டாலும், மனித சிந்தனை போலவே இந்த நுட்பத்தை நோக்குவது சரியல்ல. மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் மனித வழிகாட்டலில் உலகை நோக்குவதிலும், செயல்படுவதிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்று நோக்கில் விவரிப்பதோடு, அதன் அடிப்படை அம்சங்களையும் விளக்கும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது. செயற்கை நுண்ணறிவு கல்வித்துறை துவங்கி காவல்துறை, சட்டம், உளவியல், அகழ்வு, வங்கிச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படி பயன்படுகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. துறை தோறும் ஏஐ நுட்பத்தை விவரிப்பதன் வாயிலாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை வரலாற்று நோக்கிலும் புரிந்துகொள்ள வழி செய்கிறது. இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் இதழ் மற்றும் தினமலர் பட்டம் இதழில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.

You may also like

Recently viewed