Description
போர் நிலத்தில் போர் தான் கலையென்றில்லை. அங்கே வாழ்வும் ஒரு கலை தான். தப்பிப்பதற்கும் வாழ்வைக் கொண்டாடுவதற்கும், வீழ்த்துவதற்கும் வீழ்த்தப்படாமல் இருப்பதற்கும் இடையிலான கலையை இங்கே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தப் புத்தகம் போருக்குப் போனவனின் கதையாக போரில் களமாடுபவனின் கதையாக போரில் தோற்கடிக்கப்பட்ட கைதியின் கதையாக என வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் நிலம் கண்ட போரை முழுச்சித்திரமாக வரைந்துகொள்ள ஒரு வாசகனுக்குத் தேவையான தூரிகையும் வர்ணங்களும் இதில் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன்.