Description
இது பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுப்பு. இதில் வரும் 'செந்நிற விடுதி' கதை, சற்றே நீளமானதொரு குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்டத்தைப்பற்றியது என்பதை உணரும்போது முடிந்த கணத்திலிருந்தே கதை வளரத்தொடங்குகிறது. நூற்றைம்பதாண்டுகளுக்குப்பின்னரும் இக்குறுநாவலின் ஆற்றல் வியப்பூட்டுகிறது. இக்குறுநாவலுக்கும் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கிக்கும் உள்ள தொடர்பென்ன என்று ஆராயச்செய்கிறது.
அத்தனை கதைகளும் விதவிதமாக மானுடஆழங்களை நோக்கித் திறக்கின்றன. இவை எழுதப்பட்டு நூற்றைம்பதாண்டுகளாகின்றன. ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பால்ஸாக்கைத் தாண்டி அதிகம்பேர் சென்றதில்லை என்றும் எண்ணத்தோன்றுகிறது.