Description
திருக்குறளின் ஆழமும் விரிவும் அறிய விரும்பும் வாசகர்களுக்கு பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அளிக்கும் இன்னமுது இந்த நூல். வள்ளுவ சொல்லாட்சியின் பன்முகங்களையும் பகுத்தும், தொகுத்தும் அளிக்கும் ஒரு கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்பு.
வள்ளுவர் சொல்லேருழவராக, சொல்வலை வேட்டுவராக திகழ்வதை எடுத்துரைக்கிறது முதல் கட்டுரை."வடநூல் துறையும் தென்திசைத் தமிழும்
விதிமுறை பயின்ற நெறியறி புலவன்" பரிமேலழகரின் உரை மேன்மையை புலப்படுத்தும் கட்டுரைகள் மூன்று. பரிமேலழகரின் கருத்துக்களை கூர்ந்தாராய்ந்த நாமக்கல் கவிஞரின் குறள் பார்வையை ஆய்வு செய்கிறது ஒரு கட்டுரை.
வள்ளுவரின் வானுலகம் யாதென உரைக்கும் கட்டுரை ஒன்று. வள்ளுவரின் நடைநலத்தின் நயம் உரைப்பது மற்றொன்று. ஏழு கட்டுரைகளும், இயற்கை அறம் ஒளிவீசும் வள்ளுவம் என்ற கதிரவனின் ஏழு ஒளிக்கற்றைகளாக மிளிர்கின்றன.
- சி.இராஜேந்திரன்
பாமரருக்கும் பரிமேலழகர் – நூலாசிரியர்