தங்கைக்கு கடிதம்


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 120.00

Description

*“நேரு தன் மகள் இந்திரா எனும் பிரியதரிசினிக்கு எழுதிய கடிதங்கள் எப்படிப் பிற்காலத்தில் புகழ் பெற்றதோ; அப்படி என் உயிர் தங்கை உனக்கு நான் எழுதும் கடிதங்களும் ஒருநாள் இறைவன் நாடினால் புகழ்பெரும் நூலாகும். அதற்குந்தான் நான் இத்தனை ஆதாரங்களை, இந்த இருண்ட சிறையிலிருந்து ஆபத்துகளை எதிர்பார்த்து உனக்கு எழுதி வைக்கிறேன். - புரட்சியாளர் பழனிபாபா* .
ஆம் சிறைக்கொட்டடியில் *பழனிபாபா* அவர்கள் தன் தங்கை ரூபினா சுல்தானா அவர்களின் பெயரில் அன்றைய அரசியல் - சமூகரீதயான மனக்குமுறல்களை கடிதங்கள் வாயிலாக சிறையிலிருந்து எழுதியதே *தங்கைக்கு கடிதம்*.
என்னதான் தான் சுழன்றுவரும் சூறாவளியாக பயணபட்டாலும், பலரின் கத்திகளுக்கு காத்திருந்தாலும் , தன் குடும்பத்தை காரணங்காட்டி எப்போதும் மறைந்துக்கொள்ளவில்லை ! தன் பயணத்தை திசைமாற்றிக்கொள்ளவும் இல்லை!, மாறாக தன் சொத்துபத்துகளை வாரி இழைத்தே சமூக - சமுதாய பணிகளில் முன்னின்று செய்து வந்தார்.
சமூகமும் - சமுதாயமும் மறந்துவிட்ட தலைவர்களுள் முக்கிய இடத்தில் நிற்கும் *பழனிபாபாவை* அவரின் சித்தாந்தங்களின் மூலம் உங்களுக்கு தெரியபடுத்தும் நோக்கம் என்னவென்றால் .......
பாசிசத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக அறியும் நமக்கு முன்பே அதன் வேர் முதல் நாதம் வரை புரிந்துவைத்துக்கொண்டு பயணபட்டவர் என்பதற்காகவே!
பாசிச எதிரிகளை எதிர்கொள்ள *ஜிஹாத் கமிட்டி*ஐ துவங்கி பயணப்படும் போதெல்லாம் அவரை வீழ்த்தாமல் அவரை அடையாளபடுத்தி ஆள்சேர்த்த காவிகள், ஒருக்கட்டத்தில் Electoral politicsம் தீர்வாகும் என அதற்கான அரசியல் கட்டமைப்பினை உருவாக்கும் போது கொல்லபடுகிறார் என்றால் ,
*அரசியல் அதிகாரம்* என்பது எத்தகைய வலிமையான சொல் என்பதை நாம் அறிய முடியும் இதனால் *தங்கைக்கு கடிதம்* என்ற இப்புத்தகம் பரிந்துரைக்கிறேன்.

You may also like

Recently viewed