Description
சிறுகதையில் ஒரு ரஸந்தான் நரம்புபோல ஊடுருவி ஓடவேண்டும். கதையைப் படித்து முடித்துவிட்டால், ஒரு பாவந்தான் மனத்தில் நிற்கவேண்டும். கதை ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்ச்சியிலோ .நோக்கத்திலோ அல்லது சூழ்நிலையி லோ இருக்க வேண்டும். அனந்தமான தந்திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் ஒரு தந்தியைப் பேச வைப்பதுதான் சிறுகதை சிறுகதைகள் வாழ்க்கையின் சாளரங்கள்., வாழ்க்கையில் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துக்கூறுவது இச்சிறுகதையை.