Description
எண்ணங்களும் சொற்களுமே ஒருவரை அடையாளம் காட்டுபவை. வாழ்க்கை மேம்படுவதற்குரிய ஆளுமை வளர்ப்புக் கருத்துகள் முதற்று, நேர்கண்டு உவந்த எளிய மக்களின் பண்புக் குறிப்புகள் ஈறாக நான் எழுதி முன்வைத்த பத்திகள், குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. காலதர் வழியே கண்டவையல்ல, களங்கண்டு மொழிந்த புழுதிச் சொற்கள் இவை. நகைச்சுவை, பங்குச் சந்தை, நாட்டு நடப்பு என விரியும் பார்வைப் படைப்பு. என்னுடைய பல்துறைசார் அறிதலை இயன்றவரை சொல்லிற் பயனுடையவாய்ச் சொல்லிச் சேர்த்தவற்றின் பெருந்தொகுப்பு. ”நீங்கள் யார் ? உங்களுக்கு என்ன தெரியும் ? உங்கள் பார்வை என்ன ? உங்கள் மனவார்ப்பு எத்தகையது ? உங்கள் அளவுமுறைகள், கருதுகோள்கள் யாவை ? உலகோர்க்கு உங்கள் பரிந்துரை எது ? உங்கள் வழிகாட்டல் என்ன ?” முதலான கேள்வியுடையார்க்கு இந்நூலால் விடையளிக்கிறேன்