நுண்பொருள் மாலை திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்


Author: பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

ஏட்டுச்சுவடிகளாய் பரிமேலழகர் உரை இருந்த நாளிலேயே பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தென் திருப்பேரை திருமேனி காரிரத்தின கவிராயர் பரிமேலழகர் உரைக்கு விளக்கம் தர முற்பட்டுள்ளார். பரிமேலழகர் உரைக்கு முதன் முதல் விளக்கம் எழுதிய பெருமை இவரையே சாரும். பரிமேலழகர் விளக்கிய சொற்பொருள்களுக்கு மேலும் கருத்து விளக்கம் தந்து, அவர் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைத்த தம் உரைக்குறிப்பிற்கு ‘நுண்பொருள்மாலை’ எனப் பெயர் சூட்டியது மிகப் பொருத்தமாகும்.

‘பரிமேலழகர் உரைத்திறன்’கண்டு டாக்டர் பட்டம்பெற்ற புலவர்
இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தம் ஆராய்ச்சியின் போது இந்த நூலின் அருமை பெருமைகளை நன்கு உணரும் வாய்ப்பினைப் பெற்றார். பரிமேலழகரின் திட்பநுட்பம் செறிந்த உரையை விளக்கும் பொருட்டாகவே தோன்றிய முதல் உரைவிளக்க நூல், நூல் வடிவம் பெறாத குறையை நீக்கும் எண்ணம் அவருடைய உள்ளத்தில் உருவாயிற்று. அதன் விளைவே இந்தப் பதிப்பு.

பதிப்புச் செம்மல் மு.சண்முகம் பிள்ளை

You may also like

Recently viewed