Description
ராமன் நரேந்திரன் ஆகிய இருவரும் நடுத்தர வர்கத்தில் பிறந்த சகோதரர்கள். தவறுகளோடு ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கை, சூழ்நிலைகளால் உந்தபபட்டு இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. ராமன், தன் தவறுகளைத் திருத்திக் கொண்டே முன்னேறிச் செல்கிறார். இது Forward Chronology முறையை உபயோகித்துச் சொல்லப் படுகிறது. நரேந்திரன், தன் மனம் போன போக்கில் வாழ்க்கையை இட்டுச் சென்று, வீழ்ச்சியைச் சந்திக்கிறார். இது Reverse Chronology முறையை உபயோகித்துச் சொல்லப்படுகிறது. ராமனின் முடிவும், நரேந்திரனின் தொடக்கமும், இன்றைய சமுதாயதின் இரு முக்கியப் பிரச்ச்னைகளைத் தீவிரமாக விமர்சிக்கின்றன. கல்வி, சுயமுயற்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், குடும்ப அமைப்பு இயற்கைப் பேணல், நுகர்வுக் கலாச்சாரம், ஊடகங்களின் மாயவேலை, லாபியிங், பேச்சு சுதந்திரம், அதிகார அடக்குமுறை முதலான மிக நீளமான தலைப்புகளை உள்ளடக்கிய மிகவும் சுவாரஸ்யமான கதைக் களம்.