பாரதியார் சரித்திரம்


Author: செல்லம்மாள் பாரதி

Pages: 0

Year: 2018

Price:
Sale priceRs. 100.00

Description

*பாரதியார் சரித்திரம் : செல்லம்மாள் பாரதி*
ஒரு மனிதனை படித்திட வேண்டுமானால் அவனை ஈன்றவளிடமும் - அவனால் ஈன்றவளிடமும் கேள்! என்பார்கள் .
அதன்படி தேசியகவிஞரும் - சுதந்திரபோராட்ட தியாகியுமான சுப்பிரமணிய பாரதியின் வாழ்வினை அவரின் மணவாழ்வியின் (செல்லம்மாளின்) ஊடாக அறிந்திட உதவும் நூலே *பாரதியார் சரித்திரம்*
இந்நூலில் செல்லம்மாளில் பார்வையில் பாரதியின் வரலாற்றை பல சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டப்படுகின்றது.
அதில் சில.....
*பாரதியின்* எத்தனையோ செயல்கள் , அவரின் குடும்பத்துக்கு துன்பமாகவே இருந்தாலும் ,பின்னாளில் அதை எழுதும் போது *செல்லம்மாள்* கண்ணீர் வடித்து, அவரின் மேன்மையை போற்றி இருக்கிறார்.
__________________
"என்னைப் பார்த்துக் காதல் பாட்டுக்கள் பாடுவார். நான் நாணத்தினால் உடம்பு குன்றி, எல்லோரையும் போல் சாதாரண ஒரு கணவன் கிடைக்காமல் நமக்கென்று இப்படி ஒரு அபூர்வமான கணவர் வந்து வாய்க்க வேண்டுமா என்று துன்புறுவேன்."
_________________
*பாரதிக்கு* அப்போது (ஏன் - கடைசி வரையிலும்) மிக அழகாகச் சிங்காரித்துக் கொண்டு உலாவுவதில் பிரியம் அதிகம். திருநெல்வேலி ஜில்லாவில் அவரது கிராப்புத் தலைக்காகவும், மீசைக்காகவும், நாங்கள் கேட்ட அவமரியாதை வார்த்தைகளும், கேலிப் பேச்சுக்களும் கணக்கிலடங்கா.
_________________
என்னதான் பணமில்லாவிட்டாலும் ஆடை மட்டும் எப்போழுதும் புதியதுதான் அணிவார். உயிர் பிரிவதற்குச் சிலமணி நேரத்திற்கு முன்கூட ஷர்ட்டு - கோட்டுக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு, தலைப்பாகையைச் செம்மையாகக் கட்டிக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார்.
_________________
*செல்லம்மா!* உன்னால்தான் உன் புருஷன் கெட்டுப் போகிறான். *அவன் 'எள்' என்பதற்குமுன், நீ ‘எண்ணெய்’ என்கிறாயே! பெண்டாட்டி மருந்திட்டு புருஷனை வசியப்படுத்துவதாக எல்லோரும் சொல்வது வழக்கம். உன் விஷயம் நேர்மாறாயிருக்கின்றதே!* இப்படி ஒரு புருஷனோடு வாழ்வதைக் காட்டிலும், நாங்களாயிருந்தால் ஒரு செம்பைத் தேய்த்துக் கொண்டு, *தாலு வீடு சென்று பிச்சையெடுத்து வயிறு வளர்ப்போம்*. அவன் ஆட்டின கூத்துக்கெல்லாம் நீ ஆளாகின்றாயே!"* என்று பழித்துக் கூறுவது வழக்கம்.
_________________
சில நாட்களில் வீட்டில் பாரதியாரின் சீடர்கள் நிறைய பேர் இருப்பர். எல்லாருக்கும் உணவு கொடுத்து விட்டு நான் பட்டினியாக இருந்த காலம் நிறையவென்றும் . மேலும் உணவு சமைக்க ஒன்றுமில்லாமல் கடன் வாங்கிய வெறும் பால் அல்லது பழம் சாப்பிட்டும் , பல நேரங்களில் அதுவும் இல்லாமல் எதுவும் கடத்திய காலங்கள் நிறைய உண்டென கூறுகின்றார்.
__________________
வழமைபோல ஒருநாள் *நானும் - அவரும்* மாலை தோட்டம் பார்க்கப் புறப்பட்டோம் , வழக்கம்போல் இருவரும் கைகோர்த்துக் கொண்டு தெருக்களின் வழியே நடந்தபோது . சிலர் *"ஓகோ! பைத்தியங்கள் எங்கேயோ உலாவப் போறதுகள், டோய்!" என்று கைதட்டிச் சிரித்தார்கள்* . பாரதியாரோ சிறிதும் அஞ்சாமல் கவிகளை பாடினார்.
__________________
*பாரதி* அவன் புதுப்பெண்கள் உருவாகிடவேண்டும் என்று கனவுகளை கண்டான் , அதனை அவனின் குடும்பத்து பெண்கள் ஏற்றார்களா? என்பதை அறிந்திட வேண்டாமா!

You may also like

Recently viewed