Author: ரவி சுப்பிரமணியன், தமிழில் - சித்தார்த்தன் சுந்தரம்

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 499.00

Description

*பிட்காயின் பரமபதம் - ரவிசுப்ரமணியம்*
இன்று அதிகம் பேசப்படும், அதே சமயம் "சின்ன கல்லு பெத்த லாபம்" இல்லை! இல்லை! சின்ன மண் துகள் பெரிய மலைக்குன்று , என்றடிப்படையில் லாபத்தை மட்டுமே ஈட்டவேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட *"கிரிப்டோ கரன்சி அதாவது பிட்காயின்"* குறித்து நாவல் வடிவில் எழுதப்பட்ட நூல் *பிட்காயின் பரமபதம்*.
கண்ணுக்குத் தெரியாத கரன்சியைக் கணக்கு வழக்கில்லாமல் வைத்திருக்கும் *கேமர், வங்கியாளர், அரசியல்வாதி, தீவிரவாதி* ஆகியோரிடமிருந்து ஒரு சாமானியனாக நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாக்க நேரிட்டால்? என்ன விளைவினை ஏற்படுத்தும் என்பதே இதன் சாராம்சம்.
பொருளாதார சிக்கலில் உலகம் அகப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் , பொருளாதாரங்களை தேடி எதை தின்றால் பித்தம் தணியும் அடிப்படையில் ஒரு சில மக்கள் , *அகம் ஒன்றாகவும், புறம் ஒன்றாகவும் வாழ்வதையே அறமாக வகுத்துக்கொண்டு வாழ்கின்றனர்* இவர்களுக்கு சுயத்திற்காக சமூகத்தை காவுகொடுப்பதன் பாவ புண்ணியங்கள் பற்றியெல்லாம் யோசிக்க நேரம் இருப்பதில்லை. *போர்க்களத்திற்கு வெளியே வஞ்சத்தாலும் - சூழ்ச்சியாலும் படுகொலைகள்* என்ற பண்டைய கிரேக்க ஃபோனோய் கடவுளை போல இவர்கள் செயல்படுகிறார்கள்.
வாஷிங்டன் காங்கிரஸிலிருந்து , டெல்லியின் நிதி அமைச்சகம், கோவாவின் உல்லாசக் கடற்கரை, மும்பையிலிருக்கும் பெருங்குழுமங்களின் போர்ட்ரூம் என இந்நாவல் பரபரப்பரப்புடன் பயணித்து உங்களை *மெய்நிகர் கரன்சி என அறியப்படும் பிட்காயினின்* மர்ம உலகுக்கு அழைத்துச் செல்கிறது.
புத்தகத்தைக் கையிலெடுங்கள் வாசித்து முடிக்காமல் கீழே வைக்கமாட்டீர்கள்!.

You may also like

Recently viewed